Back Cover
Look Inside
Sale!

Kannamma / கண்ணம்மா

Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

சொற்கள் ஜீவன் பெறுகின்றனஜீவித்தது யாவுமே மேலே பறக்க எத்தனிக்கின்றனஎன் தாள்களில் ஒட்டியிருக்கின்ற எழுத்துகள் குறுகிய காலங்கள் கொண்டவை தான், ஆனால் அது அவளால் மாறியது.

என்னைச் சபித்தவற்றை நினைவு கூறி, என்னை எப்போதும் முத்தமிட ஈர்க்கும் அந்த ஆபரணங்களற்ற
கழுத்துத் தொண்டையிலிருந்து எழும்சொற்கள். ஓசைகளைவிட மேலான வடிவில் – மொழியைக் கடந்த ஒன்றை மேலெழுப்பும், அது உயிர்கொண்டது. அதை நான் மொழியால் வீழ்த்தும்போது கதையாய் ஜனிக்கிறது.

இதில் இருக்கின்ற பிரச்சனை ஒன்றே ஒன்று தான் அவை கீழே     விழும் போது நான் மிகச்சரியாக தாளில் ஏந்திட வேண்டும்.

 

– ஜீவ கரிகாலன்

Weight .200 kg
Published Year

2017

Page Count

135

ISBN

32546987123

Author

Jeeva Karikalan

Publisher

யாவரும் பதிப்பகம்

Series

2017

1 review for Kannamma / கண்ணம்மா

  1. Rated 5 out of 5

    be4books

    Very good

Add a review

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Editorial Review

தற்போதைய சிறுகதை எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் ஜீவகரிகாலன். அவருடைய தொகுப்புகண்ணம்மா வாசிக்கும் போதே வேறோர் உலகுக்கு எடுத்துச் செல்கிறது. எழுதுபவன் நடப்பிலும் வெளியிலும், யதார்த்தத்திலும் கற்பனையிலும் ,இருப்பிலும் இன்மையிலும் பயணப்படுவதைப்போலே நம் மனமும் ஊசலாடுகிறது. கதை சொல்லியின் துரட்டியால் அதை கொய்து பின் நம்முள் பொருத்திக் கொள்கிறோம்.சொல்லத் தெரியாத ஓர் உணர்வால் பீடிக்கப்பட்டு அலைகிறது நம் உளம். அவர் கதை மாந்தர்கள் நீரில் குதிக்கிறார்கள் ,தம் முகம் காட்டாது சென்றுகொண்டே இருக்கின்றனர். அப்பொழுதெல்லாம் மலையுச்சியில் சந்தித்த நால்வரில் யாரோ ஒருவராகிறோம். இக்கதைகள் ஏற்படுத்திய மன அசைவினால் பாதிக்கப்பட்டு விண்நோக்கி அமர்கையில் ஒரு நட்சத்திரம் நம்மையும் நோக்கி கண்சிமிட்டி இடம் பெயர்கிறது.

கண்ணம்மா காலத்தை மீறி நிற்பாள்.

 

- பத்மஜா நாராயணன்