கணபதி சுப்பிரமணியம்

Showing all 2 results

GS is a Chennai based artist who also a curator and a writer. Hold a Masters Degree in Computer Science and Engineering from College of Engineering, Guindy. A self taught artist co-initiated a roadside art fair at Nageswara park, Mylapore as a park show every year.

He also worked in Stanford university for seven years.

1971-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த கணபதி சுப்பிரமணியம் 25 ஆண்டுகள் மென்பொருள் துறையில் பணியாற்றி, தற்போது அதேதுறையில் ஆலோசகராக செயல்படுகிறார். மேலும் இப்பொழுது இவர் ஒரு முழுநேர ஓவியர்.
சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டு, உருவ ஓவியங்களையும், உடற்கூறியல், உளக்காட்சி, ஒளி நிழல், கட்டமைப்பு போன்ற அடித்தளமான பல பயிற்சிகளை முறையாக பல ஆண்டுகள் மேற்கொண்டவர்.
தொடர்ந்த தேடலில் இயங்கி ஓவிய கோட்பாடுகளையும் இலக்கணத்தினையும் கற்றறிந்து அதன் தனிமங்களான கீற்று, வடிவம், வண்ணம், ஒளிதிண்மை மற்றும் இழைநயம் கொண்டு மெய்சாரா ஓவியங்களில் இயங்கும் சுதந்திரத்தினை உணர்ந்து அதில் பயணிக்கின்றார்.
இந்த பயணத்தில் வாசிப்பில் இயங்கி, ஓவிய உலகின் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த அசாதாரண ஓவிய மேதைகளின் படைப்புகளையும் அவர்களின் எழுத்துக்களையும் ஆராய்ந்து அதன் புரிதலில் கண்ட புதிய கோணங்களை பரிசோதனைகளாக படைப்பிலும், அதனை எழுத்தின் மூலமாக பகிருதலிலும் இயங்கி வருகிறார்.

X