ஷான் கருப்புசாமி

Showing all 3 results

ஷான்

ஷான் கருப்புசாமி என்ற பெயரில் எழுதி வரும் இவரது இயற்பெயர் சண்முகம். சென்னையில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, தாளக்கரைப்புதூர் இவரது பூர்வீகம்.

இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் இவருடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், முல்லைச்சரம், கணையாழி மற்றும் உயிர்மை ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. “விரல் முனைக் கடவுள்”, “ள்” ஆகிய கவிதைத் தொகுப்புகளை அடுத்து “ஆண்ட்ராய்டின் கதை” என்ற தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரை நூலும் வெளியாகியுள்ளது. மின்னம்பலம் இணைய தளத்தில் “நாளை உலகம்” என்ற தலைப்பில் தொழில்நுட்பம் சார்ந்த தொடர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். “வெட்டாட்டம்” என்ற இவரது முதல் நாவல் 2017ல் வெளியானது.

இணைய எழுத்தாளருக்கான சுஜாதா விருதை 2017ம் ஆண்டில் இவர் பெற்றார்.

தற்பொழுது இவரின் படைப்பு ஒன்று இரண்டு மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. எழுத்து, திரைக்கதை உருவாக்கம் ஆகியவற்றுடன் இணையம் வழியாக விழிப்புணர்வு குழுமம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.

X