சிறுகதைத் தொகுப்பு
அம்புப் படுக்கை / AMBU PADUKKAI
₹180.00 ₹162.00
பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாவின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒரு பக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன.
SKU: BE4B0009
Categories: Yaavarum Publishers, சிறுகதைகள்-Short Stories, புத்தகங்கள்
Tags: AMBU PADUKKAI, SUNEEL KRISHNAN, yaavarum, yaavarum publishers, அம்புப் படுக்கை, சுனில் கிருஷ்ணன், யாவரும், யாவரும் பப்ளிஷர்ஸ், யுவபுஷ்கார்
பணமும் பாசமும் அறிவியலும் விதியின் முன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும் வாசுதேவன் கதையின் மூலம் அறிமுகமான சுநீல் தன் பேசும்பூனை கதைமூலம் கணையாழியின் சிறந்த குறுநாவலுக்கான பரிசைப் பெற்று, ஜெயமோகன் காதில் புகை வரும் அளவிற்கான எழுத்தாளராய் வந்து நிற்கும் பயணமே இந்த அம்புப்படுக்கை தொகுதி.
பத்து கதைகள் கொண்ட இந்த தொகுப்பில் தர வரிசைப்படி முதல் இடம் வைக்கச் சொன்னால் நான் வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுப்பேன். அதில் உள்ள தவிப்பும் இயலாமையும் “சக்சன் போட கொஞ்சம் லேட்டானாக்கூட மூச்சு நின்னுடும்” என்று சொல்லிவிட்டு வருவதும் மிகவும் பாரமானது. வாசுதேவன் பெற்றோருக்கு அளிக்கும் அதே வேதனையை மருத்துவருக்கும் பின் வாசகனுக்கும் அளிக்கிறான். அந்த உணர்வைக் கடத்திய இடத்தில் இந்தக்கதை வெற்றியடைகிறது. இறுதியில் கொச்சையான தெலுங்கில் அந்தக் குழந்தை பொம்மையைப் பிய்த்து விளையாடுவதில் கதையை முடித்திருப்பார். வந்தேறிகளின் தெலுங்கு, ஊழைவிடவும் கொடுமையானது
Be the first to review “அம்புப் படுக்கை / AMBU PADUKKAI” Cancel reply
Related products
-8%
-11%
-10%
-13%
-11%
-12%
-12%
-11%
Reviews
There are no reviews yet.