ஒட்டுமொத்த திரைப்பட வரலாற்றிலும், தார்கோவஸ்கியை போல மனித ஆன்மா குறித்த வியக்கத்தக்க நிலைப்பாட்டை தங்களின் திரைப்படங்களில் வெளிக்கொணர்ந்த இயக்குனர்கள் எவருமில்லை. இன்றைய திரைப்படங்கள், பாலியல் சூழ்ச்சியையும், அற்பத்தனமான கவர்ச்சியையும், மனித உணர்வுகளை மிகைப்படுத்தி காண்பிப்பதன் மூலமாகவும் சீர்குலைந்து குறுகிய எல்லைக்குள்ளாக தேங்கி நின்றிருக்கும்போது, தார்கோவஸ்கி தனித்த ஒருவராக, அதற்கு முற்றிலும் நேர்மாறான பாதையில் மனித ஆன்மாவின் தெய்வீக நிலையினை தனது திரைப்படங்களில் வெளிக்காட்டினார்.
எது தார்கோவஸ்கியை, ஏனைய இயக்குனர்கள் நெருங்கி செல்ல இயலாதபடி தனித்துக் காட்டுகிறதென்றால், மனிதன் ஒரு தெய்வீக ஆன்மா என்று அவரது அசைக்க முடியாத எண்ணம்தான். இது தார்கோவஸ்கியின் சுய நிலைப்பாடு என்று பலரும் நினைக்கக்கூடும். அத்தகைய நினைப்புதான் அவர்களின் சினிமா தோல்வியுறுவதற்கான 99% காரணம். மனிதனின் பாலியல், மனிதனின் பைசாசத்தன்மை மற்றும் மனிதனின் சமூக பங்களிப்பு போன்றவைகளை தங்களின் திரைப்படங்களில் கையாளும் இயக்குனர்கள், திரைப்படங்களில் மனித ஆன்மாவை விசாரணைக்குள்ளாக்குவதை எளிதாகவும், வசதியாகவும் புறக்கணித்துவிடுகிறார்கள். இன்றைய சினிமாக்களில் யாரேனும் எப்போதாவது மனிதனின் தெய்வீக ஆற்றலை தொடுகிறார்கள் என்றால், அது அவர்களின் படங்களில் சிறிய பங்களிப்பாக மட்டுமே பிரயோகப்படுத்தப்படுகிறது. மனிதனின் தோற்றத்திற்கான ஆதார கேள்வியினை அவர்கள் மறந்தும் தங்களது படங்களில் தொடுவதில்லை. ஆனால், தார்கோவஸ்கியின் அனைத்து திரைப்படங்களும் இதே கேள்வியினையே மீண்டும்மீண்டும் ஆராய்கின்றன. இன்னும் சொல்வதென்றால், அவரது மனதின் தூய்மை, அவரது திரைப்படங்களிலும் படிந்திருக்கிறது. அவரே சொல்வதைப்போல, அவரது கதாப்பாத்திரங்கள் அனைவருமே சுய விசாரணைக்கு ஆளாகிறார்கள்.
-10%
காலத்தைச் செதுக்குபவர்கள்/Kalaththai sethukkubavarkal
₹180.00
திரைப்படத் துறையில் மிகத் தீவிரமாக இயங்கிய இயக்குனர்களின் வாழ்வை அறிவதன் மூலமாக,அவர்களது படைப்புகளை புரிந்துகொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருந்த நேர்காணல்களும்,கட்டுரைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தில் திரைப்படங்களைஆன்மிக மற்றும் தத்துவார்த்த ரீதியிலான கண்ணோட்டம் கொண்ட இயக்குனர் முதல் பகுதியிலும், அரசியல் ரீதியிலாக தங்களது திரைப்படங்களை இயக்கியவர்கள் இரண்டாவது பகுதியிலும்,சமகாலத்தில் அதிக கவனிக்கப்படுகின்ற அதே தருணத்தில் வழக்கமான திரைப்பாணியை கையாளாத நவயுக திரைப்பட இயக்குனர்கள் மூன்றாவது பகுதியிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.