தத்துவ தளத்தில் நின்று நாவலின் கதைப்போக்கை இப்படிக் கூறலாம்: ‘ஈகோ’ (Ego) உணர்வால் அகந்தையின் சிகரத்தை எட்டப் பாய்ந்து ஓடிய இரு ஜீவன்கள் ஒரு கட்டத்தில் ஈகோ நொறுக்கப்பட்டு ஆன்ம விழிப்புடனும் ஞானத்தெளிவுடனும் தமது சுயம் தெரியக்கண்டு திரும்பிவருவதே…
உரையாடல், நிகழ்ச்சி சித்தரிப்பு, சூழ்நிலை வர்ணனை, பாத்திரத் தன்மை எல்லாவற்றிலும் யதார்த்தம் நூற்றுக்கு நூறு கடைபிடிக்கப்பட்டுள்ளது. சின்னச்சின்ன விஷயங்களில் ஜெயந்தன் காட்டி இருக்கும் கவனமும் கலைத் தேடலும் அபாரமானது. வார்த்தைகள் நெளிந்து வளைந்து வந்து சூழ்நிலையைக் கச்சிதமாக அனுபவ வெளிச்சத்தில் வெளிக்காட்டி விடுவதோடு தத்துவப் பார்வையையும் தந்துவிடுகிறது
Reviews
There are no reviews yet.