நாவல்
சமீப காலத்தில் மனித மனத்தைத் துணுக்குறச் செய்கிற, ஆகச்சிறந்த புனைவு சைலபதியின் ‘பெயல்’. 2017 டிசம்பரில் வெளியாகியிருக்கும் நாவல். 2015 டிசம்பரில், சென்னை கண்ட பெருவெள்ள பரிதவிப்பினூடான அவலக்குரலின் பாரித்தலாக விரிந்து சென்னையின் கோர முகத்தைத் துலக்கமாக்கியிருக்கிறது. மனிதன் வெறி பிடித்தவனாய் அலைந்து திரிந்து கால் வைக்கும் இடம் உருப்படாது. அந்த இடம் அவனையை திருப்பி அடிக்கும் என்பதுதான் கதையின் திரட்சி. நாவலுக்கேயுரிய உள்மடிப்புப் பிரதிகள் மூன்று இதில் இடம் பெற்றிருக்கின்றன.
-11%
பெயல்/Peayal
₹160.00
சைலபதியின் நாவல் பருந்துப் பார்வையாக அந்த பயங்கரக் கனவின் முழுப் பரிமாணத்தையும் நம் கண்முன் வைக்கிறது. காதை செவிடாக்கும் இடைவிடாத மழையின் ஓசையில் மனம் பேதலித்துப் போன ஓர் இளைஞன் அவனுள் ஜீவகளையை ஏற்படுத்தப் போராடும் அன்பு மிக்க அவன் மனைவி, மழைக்கு பலி கொடுத்த காதலின் மாயத் தோற்றத்தோடு உறவாடும் காதலி, வறுமையிலும் அன்பும் பாசமும்மாக வாழும் இரவுக்காவலனின் குடும்பம்… என்று மிக அழகாக சென்னையில் வாழும் பல்வேறு விதமான மனிதர்களைப் படம்பிடிக்கிறது இந்த நாவல்.
Reviews
There are no reviews yet.