திருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழாவில் வைத்து மனசிலாயோ வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கலைப் படத்திற்குண்டான களமும் கருவும் என்று பட்டது. மணமுறிவு பெற்ற கதைத்தலைவன். அவனுக்கு கழுத்துவலி. அது உள்ளத்தின் வலியாகவும் இருக்கலாம். அவன் எழுத்தாளனும்கூட. ஒரு அந்நியநாட்டின் அறியா நிலத்தில் சிகிச்சைக்காக வருகிறான். அங்கே விடுதியில் தங்கியிருக்கிறான். பலரை சந்திக்கிறான். பயணம் செய்கிறான். உடலும் உள்ளமும் மெல்ல மீள்கின்றன. அது ஒருவகை தன்மீட்பாகவும் அமைகிறது.
மனசிலாயோ என்னும் சொல்லை நவீன் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் மலையாளத்தில் கற்றுக் கொண்ட ஒரே சொல்லாக இருக்கலாம். புரிகிறதா? என்று பொருள். எந்த மொழிச் சூழலுக்குச் சென்றாலும் இந்தச் சொல்லின் வேறுவடிவங்களையே கற்றுக் கொள்வார் போலும். உலகை நோக்கி அவருக்கு கேட்கவிருப்பதே இச்சொல்தான். எந்த எழுத்தாளனுக்கும் அப்படித்தான்.
ஜெயமோகன்
Reviews
There are no reviews yet.