வழிகாட்டி

166.00

ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்பனை புரி. வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில்நடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான். கலைக்கே தன்னை அர்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி) யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும் குறுக்கிட்டு மீளுவதை விவரிக்கிறது கதை.

சூழ நிகழும் சமூக நடவடிக்கைகளையும், மனித இயல்புகளையும் கலையழகு குறையாமல் நகைச்சுவையுடன் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். நாராயணனின் தனிச்சிறப்புகளான பரபரப்பற்ற கதைப்போக்கு, தெவிட்டாத நகைச்சுவை, மனித குணத்தை நன்கு அறிந்த அனுபவ முத்திரை, நாசூக்கான கிண்டல் எல்லாம் நிறைந்த இந்த ஆங்கில நூல் 1960ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமி விருதைப் பெற்றது. பல வெளிநாட்டு மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ஆங்கில – ஹிந்தி மொழிகளில் திரைப்படமாக்கப் பட்டுள்ளது. சாகித்திய அகாடெமி 1966ல் வெளியிட்ட தமிழாக்கத்தின் மறுபதிப்பு.

வழிகாட்டி

166.00