விளையாட வந்த எந்திர பூதம்

110.00

தேசிய அரசியல், பாலினம், தொழில்நுட்பம், முதலீடு ஆகிய கட்டமைப்புகளுக்குள்
விநியோகிக்கப்பட்டிருக்கிற உடல் தன்னுடைய எண்ணற்ற அசௌகரியங்களையும்
திளைப்புகளையும் தேய்வழக்காக்கி விட்டிருக்கிறது. புதிய சொல்முறைகள்
சாத்தியம்தானா என்ற தேடலும், பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான
பிணக்கும், விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை இங்கே நெறிப்படுத்துகின்றன.
வாழ்வு குறித்து உலர்ந்த முரண்நகையும் சில்லிடும் திகைப்பும் ஊடாடும் இக்கவிதைகள்
உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை
கடையை மூடிக்கொண்டு கிளம்பலாம் என்ற அவநம்பிக்கைக்கும் இடையே உள்ள
சாத்தியங்களை மொழிக்குள் கொண்டுவர முயல்பவை.
இருப்புக்கு என்ன நடந்தது? ஏன் பார்வை மங்குகிறது? தரிசனம் என்ன விலை? இது
என்ன திரை? எந்தத் தொழிற்சாலை என் காதலனை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது?
செத்து விளையாடும் விளையாட்டில் நான் எத்தனையாவது பலி? நவீனத்துவ அசதியின்
படிப்பினைகள் பின்நவீனத்தையும் தாண்டிய சமகாலத்தில் எப்படியெல்லாம்
உருமாறிக்கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்குப்
பெருந்தேவி ஒரு மாஸ்டர்க்ளாஸ்!

  • ஹரி ராஜலட்சுமி

 

48 in stock

விளையாட வந்த எந்திர பூதம்

110.00