வெள்ளை யானை

450.00

ஒரு பஞ்சம் எங்கிருந்து தொடங்குகிறது?. வறண்ட நிலத்தில் இருந்து? பொய்த்த வானத்தில் இருந்து? ஏமாற்றிய பருவநிலையில் இருந்து? இல்லை உண்மையில் பஞ்சம் அன்பற்ற ஒரு நெஞ்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட நீதியைப் பற்றி முகத்தில் அறைந்து சொல்கிறது.
இந்த நாவல் தமிழின் மகத்தான நாவல்களுள் ஒன்று.. தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட நீதியைப் பற்றி முகத்தில் அரைந்து சொல்கிறது..
இந்த நாவலில் ஒரு பகுதி வருகிறது எய்டன் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டுக்கு ஆண்ட்ரு என்கிற ஒரு இளைஞனுடனும் ஜோசப் என்கிற உள்ளூர் காரனுடனும் போகிற பகுதி. அந்த பகுதியை உங்களால் கண்ணீர் இல்லாமல் கடக்க முடியாது.. அதை படித்த இரவு உங்களால் உணவு உண்ணவும் உறங்கவும் முடிந்தது என்றால் நீங்கள் மிகப் பெரிய தைரியசாலிகள்.
இதில் வரும் சாதியைப் பற்றிய கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. இந்த கருத்திற்கு வந்து சேர சாதி குறித்து நீண்ட வாசிப்பு தேவைப்படும்.ஆனால் அதை ஒரு வரியில் சொல்லி செல்கிறார் ஜெ.மோ.
அனைவரும் படிக்க வேண்டிய நாவல்

வெள்ளை யானை

450.00