குறுங்கதைகள் சிறுகதைகளைப்போல் ஒரு கதாபாத்திரத்திற்கு ஏற்படும் மாற்றத்தையோ கதாபாத்திரத்திற்கு நிகழ்வுகளின் வழியாக கிடைக்கும் புதிய தரிசனத்தையோ சித்தரிக்கின்றன. ஆனால் அதே சமயம் கவிதைகளுக்குள்ள சொற்செட்டும் வீச்சும் நிறைந்து குறுங்கதைகள் சிறுகதைகளைவிட கவித்துவம் நிறைந்திருப்பவையாக திகழ்கின்றன. இத்தொகுப்பிலுள்ள அமானுஷ்யம், சாகசம், காதல், சமூகச் சீர்கேடுகள் ஆகியவற்றைக் களனாகக் கொண்டு எழுதப்பட்டடிருக்கும் குறுங்கதைகளிலும் கூட சவால்களை மீறி மனித மாண்புகளைத் தேடும் தயாஜியின் இந்த எண்ணமே முன்னால் நிற்கிறது. மலேசிய மண்ணின் யதார்த்தங்களைக் குறுங்கதைகளுக்குள் களமாகவும், பேச்சு வழக்காகவும், வர்ணனைகளாகவும் புகுத்த தயாஜி முயன்றிருப்பதால் குறுங்கதைகள் பல இடங்களில் ஜீவ ரேகைகள் கொண்டவையாய் மாறுகின்றன.
அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல Antha kangal virpanaikkalla
₹220.00 ₹209.00
தயாஜி
SKU: Be4books311220215
Categories: Top sellers, குறுங்கதைகள், புதிய வெளியீடுகள்-New Releases
Tags: Antha kangal virpanaikkalla, Thayaji, அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல, குறுங்கதைகள், தயாஜி, வெள்ளைரோஜா பதிப்பகம்
Be the first to review “அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல Antha kangal virpanaikkalla” Cancel reply
Related products
-16%
-5%
-10%
-19%
-10%
-5%
Reviews
There are no reviews yet.