Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை
₹160.00 ₹130.00
இந்த சமூகம் தருகிற அழுத்தங்களில் இருந்து மென்னுணர்வு கொண்ட ஒரு கோழைக்
கலைஞனால் செய்ய முடிந்ததெல்லாம் இந்த சமூகத்தின் மீதான அவனது கோவங்களை,
அக்கறையை தனது பிரதிகளுக்குள் புதைத்துவிடுவது மட்டுமே. அவன் தேடுவதெல்லாம்
விடுதலையை; எல்லாவற்றிலிருந்துமான விடுதலையை. அவனது ஒவ்வொரு படைப்பும்
நிறைவுறுகையில் அவன் தனக்கு வேண்டிய விடுதலையை கண்டடைகிறான். பின்னர்
வாசகனாக அந்தப் பிரதிதரும் இன்பத்துக்காகக் காத்திருக்கிறான். பின்னர் அவனே
விமர்சகனாகி மிகக் கடுமையாக தனது பிரதியையே விமர்சிக்கிறான். ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிறக்கிற இந்த சுகம் மட்டுமே ஒரு படைப்பாளியை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது என நான் ஆளமாக நம்புகிறேன். அதற்காகவே தொடர்ந்து எழுதவேண்டும்
என எண்ணங்கொள்கிறேன். இந்த இடத்தில் நிறுத்தி எனக்காக மட்டும் எழுதுவதை
நியாயப்படுத்த நாடுகிறேன். ஆனால் எங்கே இந்த சமூக அழுத்தங்கள் என்னைக்
கொன்றுவிடுமோ என்கிற பயமும் என்னை நிழல் போல தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அதனாலே வெளிச்சத்துக்குப் பயந்து ஓட வேண்டி இருக்கிறது. அதனாலேயே
எல்லாவற்றையும் பகிர வேண்டி இருக்கிறது. அதனாலேயே ‘அரூபமாக’ எப்போதும்
இருந்துவிட முடிவதில்லை. அதனாலேயே….
Reviews
There are no reviews yet.