கெட்டி அட்டை
(HARD CASE / Limited Edition)
பொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்கின்றன. அவஸ்தைகளால் கொந்தளிக்கின்றன. இவற்றையெல்லாம் தருணங்களாய் உணர்கின்றன. அன்றாடங்கள் அனைத்திலும் சுதந்திரம் கேட்கும் ஒரு குரல் இத்தொகுப்பின் பிரதான படிமமாகியிருக்கிறது. காலந்தோறும் அறத்தினால் செலுத்தப்படுமோர் இனமரபின் ஆவேசத்தையும் பெருங்கருணையையும் கையாலாகத்தனத்தையும் நம் முன் அளிக்கிறது. அதேவேளை நமது இருப்பின் மனஎழுச்சியையும் அமைதியையும் அபூர்வமாய் குறியீட்டுத்தன்மையாக்கும் வல்லபமும் இத்தொகுப்பில் அசாதாரணமாய் நிகழ்ந்திருக்கிறது.
வியனுலகு வதியும் பெருமலர் ( சிறப்பு வெளியீடு)
₹225.00
இளங்கோ கிருஷ்ணன்
Out of stock
Be the first to review “வியனுலகு வதியும் பெருமலர் ( சிறப்பு வெளியீடு)” Cancel reply
Related products
-10%
-8%
-10%
-10%
-11%
-9%
-10%
-12%
Reviews
There are no reviews yet.