Flip book element

சாம்பனின் பாடல் Saambanin Paadal

180.00 162.00

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ஒரு கதைக்கு வேண்டிய சுவாரசியம், கதைத்தன்மை, இலகுவான மொழி நடை எல்லாமே கச்சிதமாக அமைந்திருக்கும் கதை.
– சாரு நிவேதிதா
அமுதென்றும் நஞ்சென்றும் ஒன்று பெண்களின் இரு வேறு உலகங்களை காட்டும்  சிறப்பான கதை.
– சுப்ரபாரதி மணியன்
Read more

சீனா : சீரும் சிறப்பும் ( china Seerum Sirappum )

920.00

சீனாவின் பதிப்பகங்களில் ஒன்றான ஆன்ஹுவை பீப்பிள்ஸ் பப்ளிஷிங்ஸ் ஹவுசுடன் இணைந்து ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனம் சீனாவின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் விளக்கும் சீனா: சீரும் சிறப்பும் என்கிற ஆறு தொகுதிகளைக் கொண்ட நூல் வரிசையை பதிப்பித்திருக்கிறது.

சீனா: சீரும் சிறப்பும் எனும் இந்த புத்தகத்தில் கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, உணவு மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களும் அதை சார்ந்த அழகிய படங்களும் அடங்கியுள்ளன.

Read more

எர்தா Erta

375.00 318.00

விண்ணிலிருந்து புவிக்கு வருபவர்கள் புனைவிற்கு புதியவர்களல்ல, ஆனால் காலந்தோறும் அப்புனைவுகளுக்கான தேவை வேறு ஒன்றாக இருக்கிறது. நவீன மொழியில் பல்மதத்தன்மை (Syctretic) கொண்ட ஒரு பாத்திரத்தை படைப்பது அரசியல் ரீதியான சவாலாகவும் ஆகிட, அரசியலின் பொருட்டே அதனைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். அதே நேரம் எர்தா ஒரு சுவாரசியமான நாவலாகவும் வந்துள்ளது.

Read more

நான் ஸ்ரீலங்கன் இல்லை Naan Srilankan Illai

125.00

எப்போதும் என் எழுத்துக்கள் ஜனங்களின் குரலாகவே இருக்கின்றன. எப்போதும் என் கவிதைகள் ஜனங்களின் ஆன்மாகவே இருக்கின்றன. ஒரு பூர்வீக இனத்தின் வாழ்வு ஒரு பெரும் அபாயக் குழியில் தள்ளப்பட்டிருக்கிற நிலையில் இந்தக் கவிதைகளை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட தீர்மானத்தை உங்களால் புரிந்துகொள்ள இயலும். நம் மனங்களில் உழலும் அதே தேசம்தான் என் எழுத்திலும் துருத்துகிறது. நான் எனது தேசத்தை எழுத்தில் சுமப்பேன். நான் ஸ்ரீலங்கன் இல்லை என்பது எமது பிரகடனம் அல்ல. அது புறக்கணிப்பினால், ஒடுக்குமுறையினால், இன அழிப்பினால் எழுந்த குரல்.

-தீபச்செல்வன்

Read more

உச்சை uchai

220.00 180.00

இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் 2020 எழுதப்பட்டவை. கோவிட் 19 ஊரடங்கில் ம.நவீன் தொடர்ச்சியாக எழுதிய இக்கதைகள் மலேசிய நிலத்தின் அசாதாரண அனுபவங்களைப் புனைவுகளாக்கியுள்ளன. அவரது முந்தைய தொகுப்புகளான மண்டை ஓடி, போயாக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இக்கதைகள் தனக்கான புதிய சாத்தியங்களை அந்தந்த புனைவுகள் வழியே வடிவமைத்துக்கொண்டுள்ளன. விலங்குகளும் பறவைகளும் ஓடித்திரியும் இக்கதைகள் முழுவதும் அறிவும் அதற்கு புரியாத வெவ்வேறு சந்தர்ப்பங்களும் முயங்கிக்கிடக்கின்றன. அதுவே வாசகர்களின் அகலாத கவனத்தை மேலும் தீவிரமாக்குகிறது.

Read more

நற்திருநாடே Narthiru Naade

175.00 145.00

இயல்பிலேயே ஊர்சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கார்த்திக் புகழேந்தி, தனது தீவிர வாசிப்பின் வழியாகவும் பயணம் வழியாகவும் மட்டுமன்றி, தொழில்முறை பத்திரிக்கையாளராகவும் தொல்லியல் ஆய்வு, கல்வெட்டியல் பயின்ற ஆய்வாளராகவும் தமது கற்றல்களை நாட்டார் வழக்காற்றியல், வட்டார மொழி ஆய்வு, பழமொழி, பண்பாட்டு ஆய்வு, சங்க இலக்கிய வாசிப்பு ஆகியவற்றின் கூறுகளோடு உருவெடுத்த கட்டுரைகள் இவை. தற்காலத்தின் அரசியல் அதன் தேவைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்றுத் திரிபுகளையும், புராணத்தின் ஆதிக்கங்களையும் தகர்க்கின்ற தொன்மக் கூறுகளை முன்வைக்கிறார். அதில் சூழல் அக்கறையோடு சமூகநீதியும் அடிப்படையாய் இருக்கிறது.

Read more

Create a Flip Book for any product category. You can also select custom posts.