சேது, பிதாமகன், திரைப்படங்களை எடுத்த பாலாவின் பரதேசி திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் ரெட் டீ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முப்பத்து எட்டு ஆண்டுகள் கழித்து முதல்முதலாக எரியும் பனிக்காடாகத் தமிழுக்கு வருகிறது.இன்றைய எழில்மிகுந்த மலைநகரங்களையும், அன்னியச் செலவாணியை அள்ளித்தரும் தேயிலை தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங் கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்தக் கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்ட போன ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைதான் எரியும் பனிக்காடு.1920 முதல் 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் காணப்பட்ட சூழ்நிலையை வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். ஆசிரியர் பி.ஹெச். டேனியல். தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் வேலை செய்தவர் டேனியல். தேயிலைத் தோட்டத்தின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இதில் வரும் கதாபாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவை. சம்பவங்கள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாத நிஜம். 1925-ம் ஆண்டில் திருநெல்வேலி, மயிலோடை கிராமத்தில் வசிக்கும் கருப்பன் – வள்ளி தம்பதியிடமிருந்து இருந்து தொடங்குகிறது கதை. விவசாயமும் இல்லாமல் வேலையும் இல்லாமல் கஷ்டப்படும் கருப்பன், மேஸ்திரி சங்கரபாண்டியனைச் சந்திக்க நேர்கிறது. அவர், எஸ்டேட்டில் பாலும் தேனும் ஓடுகிறது, நீங்கள் இருவரும் சந்தோஷமாக ஒருவருடம் சம்பாதித்துவிட்டு, கை நிறைய பணத்துடன் ஊர் திரும்பி, பணக்காரனாக வாழலாம் என்று சொல்லி, நாற்பது ரூபாயும் கொடுக்கிறார். கருப்பன் – வள்ளியைப் போல பல குடும்பங்கள் வால்பாறைக்கு வந்து சேர்கின்றன. மேஸ்திரி சொன்னபடி இல்லாமல் அங்கிருந்த சூழ்நிலை முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.
எரியும் பனிக்காடு
₹250.00 ₹225.00
SKU: BE4B299
Categories: நாவல்கள்-Novels, புத்தகங்கள்
Tags: இரா.முருகவேள், எரியும் பனிக்காடு, பொன்னுலகம்
Be the first to review “எரியும் பனிக்காடு” Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Reviews
There are no reviews yet.