மலையாளப் படங்களின் தற்போதைய எழுச்சியைப் புரிந்து கொள்வதற்காக, எனது ரசனையில் நல்ல படங்களாக அறியப்பட்ட இருபத்திநான்கு படங்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நான் எழுதின இந்தப் படங்களில் எல்லாம் ஒருவிதமான புதுமையின் இணைப்பு இருந்திருப்பதாக நம்பியே தொடர்ந்தேன். நான் கூறின ரசனை அதன் அடிப்படையில் தான் இருந்தது. எதிர்காலத்தில் மலையாள சினிமா இன்னுமே கற்றுக்கொண்டு வளருவதற்கான சாரம் கொண்டிருந்த படங்கள் இந்த இருபத்தி நான்கும் என்பது என் கோணம். பலரும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்வார்கள்.
சினிமா பார்ப்பது என்பது இன்று ஒரு உறுதியான கலாச்சாரமாகிக் கொண்டு வருகிற சூழலில் மலையாள சினிமா என்றில்லை, இந்திய சினிமாவே நல்லவற்றை உட்கொண்டு வளம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. யாரும் யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எல்லைகளே இல்லை. மனிதன் எங்கேயும் மனிதன் தான் இல்லையா?
Reviews
There are no reviews yet.