Sale!

நமக்கு எதுக்கு வம்பு /Namku edhuku vambu

கார்ட்டூனிஸ்ட் பாலா இணைய உலகில் வெகு பிரபலம். குமுதம் ரிப்போர்ட்டரின் கார்ட்டூனிஸ்ட். ஃபேஸ்புக்கில் மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார். எதிரிகள் என்று கணகெடுத்தால் எப்படியும் இரு மடங்காகவாவது இருக்கும். அதுவும் திமுகக்காரர்களிடம் அவரைப் பற்றி பேசிப் பார்க்க வேண்டுமே. காதில் புகைவிடுவார்கள். அத்தனை லோலாயம் பிடித்த ஆள். அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். தலைப்பு – ‘நமக்கு எதுக்கு வம்பு?’. அவர் புத்தகத்தின் தலைப்பைச் சொன்னவுடன் சிரிப்பு வந்துவிட்டது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு ‘எனக்கு ஒண்ணும் தெரியாதப்பா’ என்று சொல்வது மாதிரிதான்.

பாலாவின் கார்ட்டூன்கள் சர்ச்சைக்குரியவை என்றும் ஒரு தலைபட்சமானவை என்றும் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் இப்படியான ஆளுமைகளுக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. இவர்கள்தான் சலனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சலனங்கள் அவசியமானவை என்று நம்புகிறேன். உரையாடல்களுக்கும் விவாதங்களுக்குமான தொடக்கப்புள்ளியாக இந்தச் சலனங்கள் இருக்கின்றன

Rs.120.00 Rs.110.00

கட்டுரைகள்
ஓவியர்கள் எழுத்துலகுக்கு வருவது புதிதல்ல. அவர்களில் மக்கட்பிரச்சினைகளைப் பேசும் நபர்கள் தான் மிகக் குறைவு. பாலாவின் கட்டுரைகள் சமூக ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டுக் கவனிக்கப்பட்டவை. சமகாலத்தில், அன்றாடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிச் செல்லும் சாமான்யர்களின் வரிசையிலிருந்து சற்று விலகியிருப்பவனது குரல். அது சமரசமற்றதாகவும், எதிர்வினை புரிவதாகவும் இருக்கிறது. மேலும் எளிய மனிதர்களின் சாயலோடு அன்பை பரஸ்பரம் பரிமாறிக் கொள்கிறது

Reviews

There are no reviews yet.

Be the first to review “நமக்கு எதுக்கு வம்பு /Namku edhuku vambu”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Editorial Review

கார்டூனிஸ்ட் பாலாவின் புத்தகம் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளகூடிய படைப்பு . உண்மையாக நடந்த நிகழ்வுகளை அழகான தலைப்புகள் இட்டு பிரசுரித்த விதம் அருமை .முதலில் ஒரு பத்திரிகையாளர் அதுவும் கார்டூனிஸ்ட் புத்தகம் வெளியிடுவது பாராட்டுக்குரியது .
பொதுவாக சமூக அக்கறை கொண்டவர்களை நாமும் எதாவது ஒரு வகையில் ஊக்கபடுத்த அவர்களுடைய படைப்புகளை வாங்குவது என் வழக்கம் ... அப்படி தான் இந்த புத்தகத்தையும் வாங்கினேன் ...
ஆனால் அதை வாங்கி படித்த பின்பு தான் தெரிந்தது அந்த புத்தகம் தான் என்னை பல வகைகளில் ஊக்கபடுத்தியது .
இதற்கு முன்பு நீயா நானா கோபிநாத்தின் "ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க " என்ற புத்தகத்தை படித்த போது ஏற்பட்ட ஒரு சிலிர்ப்பு
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலாவின் "நமக்கு எதுக்கு வம்பு " ஏற்படுத்தியது .
இதில் பெரும்பானவை முகநூலில் அவருடைய பதிவில் நான் பார்த்தவை தான் இருந்தாலும் அதை புத்தக வடிவில் பார்க்கும் போது வேறு உணர்வை ஏற்படுத்துகிறது ...... இந்த புத்தகத்தில் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்திய தலைப்புகள்
1) நினைவலையில் உயிர் வாழ்தல்
2) தேவதையின் இறுதி முத்தம்
2) காவிகளின் களம் தமிழகம்
4) காற்றில் அலையும் குரல்
5) மன்னித்து விடு பாலசந்திரன்
6) எல்லைகள் கடந்தது நட்பு
இதில் குறிப்பாக "காற்றில் அலையும் குரல்" இந்த தலைப்பை முன்பு ஒரு முறை முகநூலில் படித்தேன். படித்து பல நாட்கள் மனதை விட்டு நீங்காமல் இருந்தது பிறகு தான் கார்டூனிஸ்ட் பாலா வை தொடர ஆரம்பித்தேன் .
பாலா தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம் .

 

சதா .முரளிதரன்