பிறந்த மண்ணிலே வாழ்பவர்களை விட அவ்வப்போது விருந்தினர்போல் ஊருக்கு வந்து போவோருக்கு மண்ணின் மேல் மிகுந்த பற்றும்

பிடிப்பும் இருப்பது இயல்பு. பெண்ணாடம் இவனது பிறந்த மண் என்பதில் பெருமையுண்டு.1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஊர் என்பதில் கூடுதல் பெருமையும் செருக்குமுண்டு.இம்மண்ணை மிதிக்கும் போதெல்லாம் இவனுள் உள்ளார்ந்த உணர்வு எழும்.

பிரளயகாலேஸ்வரர் கோயில், அரசமரம், பஞ்சாய்த்து சாவடி,போலீஸ் கச்சேரி, கடைவீதி,தேரடி, பெரியவாய்க்கால் என அனைத்தும் ஊரின்

பழைய அடையாளங்கள். பதினெட்டு வயது வரை ஊரின் எட்டுதிக்கிலும் சுற்றித்திரிந்த கால்கள் இவனுடையது,தோழர்களுடன் வெய்யிலிலும், மழையிலும் கட்டிப் புரண்டு விளையாடிய மண். பெரிய வாய்காலிலும் வெள்ளாற்று மடுவிலும் நீந்தி விளையாடிய நினைவுகள் வந்து மோதுகின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெண்ணாடம்”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.