சிறுகதைத் தொகுப்பு

Reviews

There are no reviews yet.

Be the first to review “போயாக் / BOYAK”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Editorial Review

ஒரு சிறுகதை எந்தெந்த அம்சங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என பலமுறை தங்கள் தளங்களில் விவாதங்கள் நடந்திருக்கிறது. சென்ற ஆண்டில் கூட பல புதிய எழுத்தாளா்களின் கதைகளையும் அதை ஒட்டி நடந்த விவாதங்களையும் வாசித்திருக்கிறேன். இந்த வருடத்தின் தொடக்கமாக இந்த விவாதம் அமையட்டும்.

என்னளவில் ஒரு புனைவு எழுத்தாளன் – எதேனும் ஒரு நிகழ்வையோஒரு படிமத்தையோஒரு தத்துவத்தையோ தன் கண்ணோடத்தின் மூலமாக தனக்கு கிடைத்த திறப்பை மொழியின் துணையோடு விவாிக்கிறான். நவீன் போயாக் கதையின் மூலம் மூன்று விஷயங்களை விவரிக்கிறார். முதலாவதாக,ஒரு புதிய இடத்திற்கோ அல்லது நாம் வாழும் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலுக்குச் செல்லும் போதுநம் மனம் அடையும் பதட்டத்தையும்அச்சூழல் குறித்த அறியாமையினால் நமக்கு ஏற்படும் பயத்தையும் கதையின் முதல் பாதியில் விவாிக்கிறார் கதையின் நடுவில் வரும் துணைக் கதை அதை தெளிவாக காட்டுகிறது. ஜேத்தாவா தன் மகன் முதலைகளால் கொல்லப்பட்டதன் வெறுப்பு சற்றும் இல்லாமல்அவா் இது மனிதா்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் என கூறி அந்த நிலத்தின் கலாச்சார வெளியை, திறக்கிறார், இதை வாசித்தவுடன் தங்கள் பயணக் கட்டுரையில் ஒருமுறை நீங்கள் நண்பா்களுடன் பஞ்சாப் சென்று இருந்த போது, அங்கு இலை போடாமல் கைகளில் சப்பாத்தி பரிமாறியதால், மரியாதைக் குறைவாக பஞ்சாபிகள் நடந்து கொள்கிறார்கள் என தங்கள் நண்பா்கள் நினைத்தாக கூறியது நினைவிற்கு வந்தது.