மோடியின் செயல்பாடுகள் குறித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பல்வேறு கட்டுரைகள் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு முழுமையான தொகுப்பாக நூல்கள் ஏதும் வெளிவரவில்லை. அவரின் மாய்மாலங்கள் எங்கும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்வதன் ஒரு நோக்கமே இந்நூல். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு சேர்ந்து என்னை வீழ்த்த சதி செய்கிறார் என்று மோடி உரைத்தது போல அப்பட்டமான பொய்களைக் கொண்டதல்ல இந்நூல்.

விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, மோடியின் செயல்பாடுகள் குறித்து, உரிய தரவுகளோடு ஆய்வு செய்து எழுதப்பட்டதே இந்நூல். கண்மூடித்தனமான மோடி பக்தர்களிடம் இந்நூல் எந்த மாற்றத்தையும் உருவாக்கப் போவதில்லை. ஆனால், திறந்த மனதோடு விருப்பு வெறுப்பின்றி, காய்த்தல் உவர்த்தலின்றி, தரவுகளை நேர்மையாக அணுகுபவர்களுக்கே இந்நூல்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மோடி மாயை/Modi maayai”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.