Featured Image
Featured Image
Featured Image
Sale!

வெட்டாட்டம் / Vettattam

அதே நேரத்தில் ஒரு நாவல் வாசிப்பு தரும் அனுபவம் என்பது திரைப்படம் தரும் அனுவத்தைக் காட்டிலும் பெரிதும் வேறுபட்டது. ஒரு நாவலைப் படிக்கும்போது நம் மனதில் ஓடும் திரைப்படமென்பது அவரவர் கற்பனையில் உருவாவது. அது பல நேரங்களில் வேறு யாரோ சிந்தித்து உருவாக்கும் திரைப்படத்தைவிடப் பல மடங்கு நமக்கு நெருக்கமானது. கதையில் ஒரு அழகி வரும்போது நாம் அழகென்று நினைக்கும் ஒரு அழகியை அந்த இடத்தில் வைத்துக்கொண்டு படிக்கிறோம். கதையின் நாயகனாக நாமே மாறி விடுகிறோம். அங்கே வீசும் காற்றையும் அது சுமந்து வரும் வாசனைகளையும் உணர்கிறோம். அந்த எழுத்துகளுக்குள் தொலைந்து போகிறோம். அந்த நாவலாசிரியரே வந்து திரைக்கதை எழுதி இயக்கினாலும் வாசகன் மனதினுள் ஓடிய திரைப்படத்துக்கு நியாயம் செய்ய முடியாது. இதன் காரணமாகவே வெட்டாட்டமும் நோட்டாவும் இரு வேறு படைப்புகளாகவே தொடர்ந்து உணரப்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இவ்விரண்டில் ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்கான வாசலாகவே தொடர்ந்து இருக்கும். .

– ஷான்.

 

cash on delivery not available

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெட்டாட்டம் / Vettattam”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Editorial Review

நாவலின் முதல் அத்தியாத்தைப் படித்து முடித்து இரண்டாம் அத்தியாத்திற்குள் சென்று விட்டால், 266 பக்கங்களையும் வாசித்த பின்பே தான் கீழே வைக்க முடியும். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை. மிகத் தேர்ந்த கதைசொல்லியாக, சுவாரசியமான நடையில் நாவலைப் படைத்துள்ளார் ஷான் கருப்பசாமி.

இரண்டாம் அத்தியாயத்தில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி வரை நீடிக்கிறது. எலியும் பூனையுமாக இருக்கும் தந்தை மகன் உறவு, கோமாவில் இருந்து மீண்டு நைச்சியமாக அரசியல் செய்யும் பழுத்த அரசியல்வாதி, எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்க்குக் கடத்துதல், வருணுக்காக உயிரையே கொடுக்கச் சித்தமாயிருக்கும் சீன நண்பன் வாங், பனாமாவின் ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்யப்படும் பொருளாதாரக் குற்றங்கள், முதல்வருக்கு அடைக்கலம் தரும் பிரதான எதிர்கட்சித் தலைவரின் வாரிசு என நாவலின் அனைத்துப் பகுதிகளுமே சுவாரசியம்.

வெட்டாட்டத்தின் சிறப்பு அதன் எளிமையும் சுவாரசியுமும் மட்டுமில்லை. படிக்கும் பொழுதும் சரி, படித்த பின்பும் சரி, ஓர் உற்சாகம் மனதோடு இழையோகிறது. கதைக்குள் வாசகனை இழுத்து விடுவதே ஷானின் வெற்றி. சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் நாவல் தொட்டுச் சென்றாலும், எவ்வித மன அயற்சியும் அளிக்காமல் நிறைவாய் முடிகிறது.

 

தினேஷ் ராம்